உயிருக்கு போராடிய நிலையில் ஒருவரும் உடலமாக ஒருவரும் மீட்பு: விசாரணையில் வெளிவந்த தகவல்

#SriLanka #life #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
உயிருக்கு போராடிய நிலையில் ஒருவரும் உடலமாக ஒருவரும் மீட்பு: விசாரணையில் வெளிவந்த தகவல்

மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலை நெல்லிக்காடு பிரதேசத்தின் கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், மற்றுமொரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறை அதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

முன்னதாக, கொத்தியாபுலை பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இரண்டு உடலங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் கிணற்றினுள் பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் மூழ்கி இருப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் குறித்த பெண் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிணற்றினுள் இன்னுமொரு சடலம் இருப்பதுவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், சிதைந்த நிலையில் இருந்த உடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!