ஈரான் பதிலடி: 27 அமெரிக்கா இராணுவத் தளங்கள் இலக்கு

#America #world_news #Attack #Israel #War #Iran #Drone #ImportantNews #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
ஈரான் பதிலடி: 27 அமெரிக்கா இராணுவத் தளங்கள் இலக்கு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை, இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது புதிய கட்டத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, இஸ்ரேலின் வர்த்தக மையமான டெல் அவிவ் உட்பட மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஈராக்கில் உள்ள அல்-ஹரீர், குவைத்தில் உள்ள அலி அல் சேலம் மற்றும் ஆரிஃப்ஜான் உட்பட பிராந்தியம் முழுவதும் உள்ள சுமார் 27 அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலிய இராணுவத் தலைமையகம் மற்றும் ஒரு பெரிய பாதுகாப்புத் தொழில் வளாகம் ஆகியவற்றை தாம் தாக்கியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மற்றும் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ஈரான் இந்தத் தீவிரமான 'ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4' என்ற நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் வான் எதிர்ப்பு அபாய ஒலிகள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. அதேநேரம், இஸ்ரேலிய வான்படை அவற்றை இடைமறித்து அழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4