இன்றைய ராசிபலன் (19.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (19.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பரணி: முயற்சியில் இழுபறி உண்டாகும். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் உண்டாகும். வரவு செலவில் கவனம் தேவை. கார்த்திகை 1: உங்கள் வேலையில் முழுமையான அக்கறை கொள்வது அவசியம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரோகிணி: தடைபட்ட வேலை நடக்கும். கேட்ட பணம் கிடைக்கும். நண்பர்களால் முயற்சி வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருவாதிரை: செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். புனர்பூசம் 1,2,3: பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

புனர்பூசம் 4: நன்மை காணும் நாள். நெருக்கடி நீங்கும். முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் உயரும். பூசம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். செல்வாக்கு உயரும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். ஆயில்யம்: லாபம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.

சிம்மம்

மகம்: விழிப்புடன் செய்பட வேண்டிய நாள். செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் தடுமாற்றம் அடைவீர். பூரம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம், இயந்திரப் பணியில் இருப்பவர்களுக்கு குழப்பம் வந்து மறையும். உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

உத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு பிறக்கும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். அஸ்தம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். தொழிலில் கவனம் அதிகரிக்கும். விலகிச் சென்றவர் தேடி வருவார். 

துலாம்

சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். சுவாதி: நேற்றைய முயற்சியில் வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலை முடியும். 

விருச்சிகம் 

விசாகம் 4: சந்தோஷமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். அனுஷம்: தடைகளைத் தாண்டி வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நம்பிக்கையுடன் மேற் கொண்ட முயற்சி வெற்றியாகும். கேட்டை: விருப்பம் நிறைவேறும். நேற்று தள்ளிப்போன வேலை இன்று முடிவிற்கு வரும். 

தனுசு

மூலம்: தடைகளைத் தாண்டும் நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் சிறு பிரச்சனை தோன்றும். பூராடம்: அலைச்சல் உண்டாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திராடம் 1: உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடம் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். கவனமாக செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். திருவோணம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர். உடல்நிலை சீராகும்.

கும்பம் 

அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். செலவிற்கேற்ற வரவு வரும். சதயம்: எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பூரட்டாதி 1,2,3: செல்வாக்கு உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.

மீனம்

பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மன பயம் நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஆதரவு அதிகரிக்கும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!