சுவிற்சர்லாந்தில் தனிநபர் ஒருவரின் மாத செலவு எத்தனை பிராங்குகள்?

#Switzerland #government #money #citizen #income #L4
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் தனிநபர் ஒருவரின் மாத செலவு எத்தனை பிராங்குகள்?

சுவிசில் வாரத்தில் ஜந்து நாட்கள் வேலையும் மீதி இரு நாட்கள் விடுமுறையும் நாளொன்றிற்கு 8.15 மணித்தியல பணிக்கு குறைந்த ஊதியமாக சுமார் 4000 chf பிராங்குகளில் இருந்து வேலை மற்றும் தகுதியின் அடிப்படையில் 5000 chf வரை வழங்கப்படுகின்றது.

பெரும்பாலும் 90 வீதமானவர்கள் அந்த குறைத்தளவு சம்பளமான 4000ஐ ஊதியமாக பெற்றுக்கொள்கின்றார்கள். அதில் ஏனைய வரிகள் போக மீதமாக 3300 பிராங்குகளே வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும்.

இந்த தொகையில் ஒருவர் தனித்து வாழ்ந்தால் வீட்டு வாடகையாக 1000 பிராங்குகளும் குடும்பம் என்றால் 1800 பிராங்குகளும் செலுத்த வேண்டும்.

images/content-image/1773852111.jpg

மருத்துவ காப்புறுதியாக தனி ஒருவர்க்கு 300 ம் ஐந்து பெயர் கொண்ட குடும்பமாயின் 1200 பிராங்குகள் கட்டணமாக கட்ட வேண்டும்.

தொலைபேசிக்கு 100,மின்சாரம்100,போக்குவரத்து 200, உணவு 400, உடை200 அதனை விட கொண்டாட்டங்கள் எதுவும் வந்தால் அது வேறு எடுக்கும் சம்பளமே செலவுக்கு மேலாக வருகின்றது.

இதுவே அடிப்படை செலவுகள் கார் வைத்திருப்பது கல்யாணம் கட்டுவது கோவில் கட்டுவது சீட்டுப் பிடிப்பது லோன் எடுப்பது வீடு வாங்குவது கடை திறப்பு எல்லாம் அடிப்படை செலவுக்குள் வருவதை ஐரோப்பியர்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள்.

விடுமுறையில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் விமான அனுமதிச் சீட்டு உட்பட செலவுக்கான பணத்தை சிறு சேமிப்பிலோ அல்லது பதின்மூன்று மாதச் சம்பளத்தில்த்தான் போக வேண்டும்.

அதனை விட இரண்டு மூன்று அல்லது அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தலா 215 பிராங்குகளும் பெரிய குழந்தைக்கு 250 ம் மேற்படிப்பு படிப்போர்க்கு 800ம் கொடுக்கின்றார்கள்.

images/content-image/1773852126.jpg

இது பெரும்பாலும் குழந்தைகளினது செலவுக்கே போதுமானதாகும். ஒரு குடும்பத்தில் மனைவி உட்பட இன்னுமொரு பிள்ளை உழைக்கும் வீட்டிலையே(காட்டிலையே மழை)அவர்கள்தான் சின்னத்திரையில் வருவது போல மிகவும் அழகன் மாடி வீடுகளை தாயகத்தில் நிர்மாணிக்கின்றார்கள்.

ஏனையோர்கள் திருடி ஒன்றிற்கு இரண்டு வேலைகளைச் செய்து குறுக்கு வழியில் செல்வோரும் உண்டு அவர்களும் தங்களது உடலை பலவீனமாக்கி மாடி வீட்டுக் கானொளிகளுக்கு சொந்தமாகி உள்ளார்கள்.

எது எப்படியோ சுவீசை பொறுத்தவரை நல்லதொரு ஆராக்கியமான ஆயுளை உடையவர்களுக்கு வயோதிப காலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஓய்வூதியமாக பெருந்தொகைப்பணம் ஒன்று காத்திருக்கின்றது.

அது இலங்கைப் பணத்தில் பல கோடி ரூபாய்கள் வரும். இங்கே உழைத்து மாதாந்த காட்சிகளாக வாழும் பெரும்பாலான வெளி நாட்டவர்க்கு அது ஒன்றே பெரும் வரப்பிரசாதம் ஆகும் அதற்கு பல ஆண்டுகள் வனவாசத்திற்கு சரிநிகராக வாழவேண்டிய நிர்பந்தம். முகநூல் பதிவு வே.கேசவன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!