இலங்கை வான்படைக்கு புதிய பலம்: அமெரிக்காவின் 10 ரேன்ஜர் உலங்கு வானூர்திகள் மே மாதம் வருகை!

#SriLanka #Helicopter #Air Force #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 hours ago
இலங்கை வான்படைக்கு புதிய பலம்: அமெரிக்காவின் 10 ரேன்ஜர் உலங்கு வானூர்திகள் மே மாதம் வருகை!

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட TH-57C Ranger ரகத்தைச் சேர்ந்த 10 உலங்கு வானூர்திகள் தற்போது இலங்கையை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த உலங்கு வானூர்திகள் கடந்த 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவிலுள்ள மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டுள்ளன.

இவை எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை Bell 206B-3 JetRanger ரக உலங்கு வானூர்திகளின் இராணுவப் பதிப்பாகும். 

இவை இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த புதிய உலங்கு வானூர்திகள் விமானப்படையின் தற்போதைய Bell 206 ரக உலங்குவானூர்திப் பிரிவுடன் இணைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் புதிய விமானிகளுக்கான மேம்பட்ட பயிற்சிகளை வழங்குதல், இயற்கை அனர்த்தங்களின் போது உடனடிப் பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான பொதுவான செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல் போன்ற முக்கிய செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலங்கு வானூர்திகள் குறிப்பிடத்தக்க வகையில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த நன்கொடையானது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் , பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையின் விசேட குழுவொன்று அமெரிக்காவிற்குச் சென்று இந்த உலங்கு வானூர்திகளைப் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!