எரிபொருள் கட்டுப்பாடுகள்: அரசாங்கத்தின் அதிரடிச் சுற்றறிக்கை!

#SriLanka #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
எரிபொருள் கட்டுப்பாடுகள்: அரசாங்கத்தின் அதிரடிச் சுற்றறிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில், புதிய வழிகாட்டல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள 09/2026 இலக்க சுற்றறிக்கையில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச அலுவலகங்களின் செயல்பாடுகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அதே வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் நிறுவனத் தலைவரின் தீர்மானத்திற்கு அமைய உத்தியோகத்தர்களை பணிக்கு அழைக்க முடியும்.

தொழில்நுட்ப வசதிகள் உள்ள திணைக்களங்களில், உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு நேரில் வராமல் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளை நிறுவனத் தலைவர்கள் மேற்கொள்ள முடியும்.

இந்த விடுமுறை அறிவிப்பானது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. அமைச்சின் செயலாளர், மாகாண தலைமைச் செயலாளர் அல்லது நிறுவனத் தலைவரினால் அத்தியாவசியமானது எனத் தீர்மானிக்கப்படும் நிறுவனங்கள் புதன்கிழமைகளில் வழமை போல இயங்கும்.

ஏற்கனவே சுழற்சி முறை அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கும் இந்தச் சுற்றறிக்கை பொருந்தாது. அரச நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் விழாக்கள், மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான 04ஃ2022 இலக்க சுற்றறிக்கை அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்குவார்.

நீதித் துறை சார்ந்த உத்தியோகத்தர்களைப் பணிக்கு அழைப்பது தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு தேவையான வழிகாட்டல்களை வழங்கும்.

மேலும், "டிட்வா" சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர பணிகளுக்காக உத்தியோகத்தர்களை அழைக்கும் அதிகாரம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!