பக்தாத்தில் பதற்றம் - அமெரிக்கத் தூதரகம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!

#Flight #America #world_news #Attack #War #Iran #Drone #ImportantNews #L4 #IranVsIsrael
Lakhi
1 month ago
பக்தாத்தில் பதற்றம் - அமெரிக்கத் தூதரகம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ஆளில்லா வானூர்தி ஊடுருவியதை அடுத்து, வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயற்பட்டு அதனைத் தடுத்துத் தாக்கியதாகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் முயற்சியின் போது தூதரகத்தின் அருகாமையில் ஒரு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!