எரிபொருள் QR நடைமுறையை காலவரையறையின்றி நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!

#QRcode #system #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
எரிபொருள் QR நடைமுறையை காலவரையறையின்றி நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!

மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியைச் சமாளிக்க, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை காலவரையறையின்றி தொடர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் இதனை டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அவசர காலங்களில் அரசுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருளை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல், சீனாவிடமிருந்தும் உதவிக்கான வாக்குறுதி கிடைத்துள்ளது.

இப்பிராந்தியத்தில் தரித்து நிற்கும் ரஷ்யக் கப்பல்களிடமிருந்து எரிபொருளைப் கொள்வனவு செய்வது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ரஷ்யத் தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கோரிக்கை மொஸ்கோவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி முகமை விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, ஈரானியப் போரினால் ஏற்பட்டுள்ள இந்த விநியோகத் தடையானது, 1973 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை விடவும் மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக நாள்தோறும் மில்லியன் கணக்கான பீப்பாய் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!