இஷான் கிஷனின் மீள்வருகை: சூர்யகுமார் யாதவின் நெகிழ்ச்சியான வேண்டுகோள்...

#Cricket #sports #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
இஷான் கிஷனின் மீள்வருகை: சூர்யகுமார் யாதவின் நெகிழ்ச்சியான வேண்டுகோள்...

மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் ஐசிசி-க்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அணியின் வெற்றி இரகசியங்கள் மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய இஷான் கிஷன் குறித்துப் பேசிய சூர்யகுமார், "அணித் தெரிவின் போது நான் இஷானை அழைத்து, 'எனக்காக உலகக் கிண்ணத்தை வென்று தருவாயா?' எனக் கேட்டேன். 

அவர் என் மீது நம்பிக்கை வைக்குமாறு கூறினார். தொடர் முழுவதும் 317 ஓட்டங்களை விளாசி அவர் தனது வாக்கை நிறைவேற்றினார்" எனத் தெரிவித்தார்.

இந்தத் தொடரில் 321 ஓட்டங்களை விளாசிய சஞ்சு சாம்சன் 'தொடர் நாயகன்' விருதினை வென்றார். 

இறுதிப் போட்டியில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்த ஜஸ்பிரித் பும்ரா 'ஆட்ட நாயகன்' விருதினைத் தட்டிச் சென்றார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4