ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது

#SriLanka #Arrest #CEO #Fraud #Airlines #L4
Prasu
2 months ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவை மார்ச் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் பேரம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியிருந்த அவர், நீண்ட வாக்குமூலமொன்றை பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4