கடலில் மிதந்து வந்த எண்ணெய் பேரல்கள் - தொடங்கந்தூவையில் பரபரப்பு!

#SriLanka #Oil #Sea #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
கடலில் மிதந்து வந்த எண்ணெய் பேரல்கள் - தொடங்கந்தூவையில் பரபரப்பு!

இலங்கையின் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவுக்குள் இரண்டு ஈரானியக் கப்பல்கள் வந்தடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு கடற்பரப்பில் ஏற்படக்கூடிய கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீதான பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த மார்ச் 7 முதல் ஆழ்கடல் ஆய்வுகள் மற்றும் பவளப்பாறைகளுக்கு அருகில் மூழ்கி ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் கடற்படை மற்றும் கடலோரக் காவற்படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹிக்கடுவை மற்றும் தொடங்கந்தூவ பகுதிகளில் எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவை ஈரானியக் கப்பல்களிலிருந்து வந்தவையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிப்பதற்கமைய, இதுவரை கடல் ஆமைகள் அல்லது பிற கடலோர விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை.

பவளப்பாறைகள் மீதான பாதிப்புகள் குறித்து அறிய ஆய்வு அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்துள்ளார்.

எண்ணெய் கசிவு கண்டறியப்பட்ட இடங்கள் உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக பரிசோதனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4