டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு
டொராண்டோவின் பல்கலைக்கழக நிழற்சாலை மற்றும் குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் சந்திப்பு அருகே அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் மீது திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ராயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரமாக வகைப்படுத்தி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ் லெதர் தகவல் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த தாக்குதலின் பின்னணி குறித்து இப்போதே தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக டொராண்டோவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )