எரிபொருள் இருப்பு உறுதி: ஏப்ரல் வரை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை.

#SriLanka #Stock #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
எரிபொருள் இருப்பு உறுதி: ஏப்ரல் வரை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 – 15: முதலாவது கப்பல்

ஏப்ரல் 17 – 18: இரண்டாவது கப்பல்

ஏப்ரல் 21 – 22: மூன்றாவது கப்பல்

ஏப்ரல் 29 – 30: நான்காவது கப்பல்

இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு (Market Price) ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக் காலத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் என கூட்டுத்தாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4