70 ஆண்டுகள் சுவிஸ் இலங்கை நட்ப்பை கொண்டாடிய சுவிஸ் ஈழ தமிழர்கள்!!

#SriLanka #Switzerland #Tamil #celebration #Swiss #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
8 hours ago
70 ஆண்டுகள் சுவிஸ் இலங்கை நட்ப்பை கொண்டாடிய சுவிஸ் ஈழ தமிழர்கள்!!

ஒரு நாடு ஒருவருக்கு மதிப்பளிப்பு அளிப்பது என்பது, ஒரு ஆளாகா அல்லது சமுதாயத்தில் ஒருவராக ஒருவர், பண்பாட்டுத் துறையில், அறிவியலில் அல்லது பொதுநலத்திற்காக செய்த சிறந்த பணிகளுக்காக அந்த நாட்டின் அரசு அவரை வெளிப்படையாக பாராட்டி மரியாதை செய்வதைக் குறிக்கிறது. 

இதற்காக மதிப்பளிக்கப்படுவருக்கு பதக்கம், விருது அல்லது சிறப்பு பட்டம் போன்றவை வழங்கப்படலாம். இது அத்தொண்டிற்கு அரசு அளிக்கும் மதிப்பை வெளிக் காட்டுகிறது. 

இதனை அவ் அமைப்பின் ஏற்றிதலாக (அங்கீகாரமாக) அந்;த அமைப்பின் திறமை, உழைப்பு அல்லது நல்ல செயல்களை மதிப்பளித்துப் பாராட்டுவதைக் குறிக்கிறது. 

images/content-image/2024/08/1773055564.jpg

சைவநெறிக்கூடத்தின் பங்களிப்பு சமூகத்தாலும் பல சுவிற்சர்லாந்து தமிழ் மற்றும் சுவிஸ் தொண்டு அபை;புக்களாலும் மதிக்கப்பநாம் மேலும் நற் செயல்களை ஆற்ற ஊக்குவிக்கிறது.

40 ஆண்டுகள் சுவிற்சர்லாந்தில் தமிழர்கள் நாம் வாழ்ந்தாலும் ஒப்பீட்டளவில் சுவிஸ் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலாக இப்போதுதான் எம்மை வடிவமைத்து வருகின்றோம். 

இதற்கு முன்னர் எமது தாயகத்து தமிழர்களின் ஆற்றலே சுவிசிலும் அரசியலை தீர்மானிக்கும் ஆற்றலாக இருந்து வந்துள்ளது. 2009ம் ஆண்டிற்குப் பின்னர் எமது பார்வையில் ஈழத்தமிழர்களுக்கு இரு முனைப் பொறுப்பு உண்டு. 

எமது தோற்ற நாட்டின், தாயகத்தின் நலன் இன்னொன்று நாம் வாழும் நாட்டில் உள்ள வளத்தை இங்கு வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் நன்மை வழங்கும்படி செயலாற்றுதல். வெறும் உணர்வுரீதியான உரையாடல்கள் கடந்து நலன்பயற்கும் செயலை அனைவரும் ஆற்றவேண்டும் என்பதும் எமது பொது வேண்டுகை ஆகும். 


70 ஆண்டுகள் 70 முகங்கள் எனும் தலைப்பில் சுவிற்சர்லாந்து இலங்கையுடனான தனது தூதரக உறவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் இம்முகத்தில் பல தமிழ் முகங்களை இணைத்துக்கொண்டது. 

இதில் சைவநெறிக்கூட இணைப்பாளர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களையும் ஒருவராக தெரிவுசெய்திருந்தது. கொழும்பில் நடைபெற்ற சிறப்புக் கண்காட்சியில் சைவநெறிக்கூடத்தின் பணிகளும், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களின் செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

images/content-image/2024/08/1773056499.jpg


சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் தற்போது சமய ஆற்றுப்படுத்தல் துறையில் முதுகலை கற்கையினை பேர்ன் பல்கலைக்கழகத்தின் மேற்கொள்வதால் இந்நிகழ்வில் நேரில் பங்கெடுக்க முடியவில்லை. 

சைவநெறிக்கூடத்தின் சார்பாளர்களாக இலங்கை யாழ். இணுவில் அருட்சுனையர் தனியொளிச்சிவம் செல்லத்துரை பிரசாத் அவர்களும், செந்தமிழ் அருட்சுனையர் சிவத்திரு. சாந்தமணி பிரேமதாசன் அவர்களும் பங்கெடுத்தனர். 

சுவிற்சர்லாந்து அரசின் மதிப்பளிப்பினை ஏற்ற அதே வேளை «புலம்பெயர் தமிழர்கள் 40 ஆண்டுகள்» குழுமத்தின் முனைப்பில் சுவிற்சர்லாந்து அரசிடம் தமிழர்களுக்கு நீதி வேண்டி அளிக்கப்பட்ட வேண்டுகை (மனுவினை) சைவநெறிக்கூடம் கடந்த 03. 03. 2026 செவ்வாய்க்கிழமை சுவிற்சர்லாந்து நடுவனரச தலமைச்செயலகத்தில் கையளித்திருந்தது. 

சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டு கொள்கை மனித உரிமைகள், பன்னாட்டு சட்டம் மற்றும் மனிதாபிமான மதிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

images/content-image/2024/08/1773056587.jpg


எனவே 70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாட்டம், கடந்த காலத்தை நினைவுகூரும் கொண்டாட்ட விழாவாக மட்டுமல்லாது, ஆறாத வடுவுடன் இடர் ஏந்தி வாழும் வலிசுமந்த தமிழ்மக்களுக்கு நீதி பெறும் வழிகளை பெற்றுக்கொடுக்க சுவிற்சர்லாந்து முன்னிற்க வேண்டியும், மற்றும் அறத்தை முறைமையை பொறுப்புணர்வுடன் நிறுவ சுவிற்சர்லாந்து அரசு உறுதிகொள்ள வேண்டும் எனும் வேண்டுகையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

சுவிற்சர்லாந்து வாழ் சுவிஸ் தமிழ்மக்களின் உணர்விற்கு மதிப்பளிபத்து தாயகத் தமிழ்மக்களின் இடர்போக்கி அவர்களின் போர் வலியினை சுவிஸ் அரசு ஏற்று அறியவேண்டும் எனவும் வேண்டுகைக்குழு இவ் வேண்டுகையில் வலியுறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

வாய்ப்பு எப்படி ஏற்பட்டாலும் அதனை தமிழ் மொழிக்கும், இனத்திற்கும், தாயகத்திற்கும் நன்மை பயற்கும் வகையில் மடைமாற்றலே சைவநெறிக்கூடத்தின் செயலாகும்.


செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!