இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம்

#International #celebration #Womens_Day
Soruban
3 months ago
இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் 2026 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் நாளாகும். IWD 2026 இன் இந்த வருடக்கருப்பொருள் "Give To Gain" என்பதாகும். இந்த பிரச்சாரம் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பின் மனநிலையை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தினம் என்பது வேலை, கல்வி, அரசியல் மற்றும் கலாச்சாரம் உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. சம உரிமைகள் மற்றும் நியாயமான வாய்ப்புகளின் தேவை பற்றி பேச வேண்டிய நேரமாகவும் கருதப்படுகிறது. மகளிர் தினக் கருப்பொருள் எதை ஊக்குவிக்கிறது? பெண்கள் கல்வி, தலைமைத்துவம் , தொழில்முனைவீர் , அறிவியல் , கலைகள் மற்றும் அரசியலில் வெற்றியாளராக விளங்கும்போது அது தனிப்பட்ட நபரை மட்டும் சாராமல் ஒட்டுமொத்த முழு சமூகத்தின் பிரதிபளிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த சமூகமே வலுவடைந்ததாகிறது. எனவேதான் இந்த வ்ருட கருப்பொருளும் அதை குறிக்கும் விதமாக "Give To Gain" என்கிற தலைப்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இது பாலின சமத்துவம், தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பு என அனைத்தையும் குறிக்கும் விதமாக உள்ளது.

உலக மகளிர் தினம் தோன்றியதற்கான விதை, கி.பி. 1789-ல் பாரீஸ் நகரில் போடப்பட்டது. அந்த ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின்போது, பெண்களுக்கும் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம், 16 மணி நேரம் வேலை என்ற கால நேரத்தை குறைக்க வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. 1857-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் ஒன்று கூடி போராடினர்.

இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1907-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போராட்டம் தீவிரமானது. 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் பங்கேற்று, அனைத்து நாட்டில் உள்ள பெண்களுக்கும் சேர்த்து மகளிர் தினம் ஒன்றை உருவாக்க வேண்டும், பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆவணப்படுத்த வேண்டும், ஆண்களைப் போல பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும், எல்லாவற்றிலும் சமஉரிமை வேண்டும்" என்று பேசினார்.

அதன்படி சர்வதேச மகளிர் அமைப்பு தொடங்கப்பட்டு, 1911-ம் ஆண்டு முதலே டென்மார்க், ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிப்ரவரி 28-ந் தேதி பெண்கள் தினமாக இருந்தது. பிறகு ஒவ்வொரு பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டில்தான் மார்ச் 8-ந் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடுவது என்று ஒருமனதாக முடிவுஎடுக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானம், 1977-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4