கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!
#SriLanka
#Tourist
#Russia
#beach
#Rescue
#L4
Lakhi
5 hours ago
ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர் காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு அவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் 39 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் இருவரும் ரஷ்ய நாட்டு பிரஜைகள் எனவும் தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே )