போர்பதற்றம் உயரும் நிலையில்: அமெரிக்காவுக்கு ஈரான் திறந்த சவால்!

#America #world_news #Attack #Israel #War #Iran #Iraq #ImportantNews #L4 #IranVsIsrael
Lakhi
6 hours ago
போர்பதற்றம் உயரும் நிலையில்: அமெரிக்காவுக்கு ஈரான் திறந்த சவால்!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் இராணுவ வலிமை முற்றாகச் சிதைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் வான்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது முற்றாக "துடைத்தெறியப்பட்டுவிட்டன" என்றும், திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே அந்த நாடு வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஈரானிய கடற்படையின் 24 கப்பல்கள் மூன்றே நாட்களில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானியத் தலைமைத்துவம் தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும், ஆனால் அதற்கு "காலம் கடந்துவிட்டது" என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்புகளை நிராகரித்துள்ள ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அமெரிக்கப் படைகளின் எந்தவொரு தரைவழி ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தங்கள் படைகள் தயாராகக் காத்திருப்பதாக எச்சரித்துள்ளார்.

"ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றும், சிறைப்பிடித்தும் ஊழல் நிறைந்த அந்த நாட்டு அதிகாரிகளுக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்த ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவதில் அமெரிக்காவுக்குப் பங்கு இருக்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்தையும் லாரிஜானி வன்மையாகக் கண்டித்துள்ளதாக அல்ஜசிரா (aljazeera) செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!