சீனாவுக்காக உளவு பார்த்த மூன்று பேரை கைது செய்த இங்கிலாந்து காவல்துறை
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ஆளும் தொழிலாளர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் கணவர் உட்பட சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023ம் ஆண்டு நாட்டின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறி, மூன்று பேரும் வெளிநாட்டு உளவுத்துறை சேவைக்கு உதவியதாகக் கூறப்படுவதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை என்றாலும் லண்டனில் கைது செய்யப்பட்ட 39 வயது நபர், வேல்ஸின் பவ்யிஸில் கைது செய்யப்பட்ட 68 வயது நபர் மற்றும் வேல்ஸின் போண்டிக்ளூனில் கைது செய்யப்பட்ட 43 வயது நபர் ஆகியோர் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வேல்ஸில் உள்ள கிழக்கு கில்பிரைட் பகுதியின் தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட்டின் கணவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று அறியப்படுகிறது.
(வீடியோ இங்கே )