மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுவிஸ் குடிமக்களின் நிலை என்ன?

#Switzerland #America #Attack #Israel #Iran #citizen #Middle East #L4
Prasu
3 months ago
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுவிஸ் குடிமக்களின் நிலை என்ன?

மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் தன் குடிமக்களை அங்கிருந்து அழைத்துவர இயலாத நிலையில் இருப்பதாக சுவிட்சர்லாந்தும் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான சுவிஸ் குடிமக்களை அங்கிருந்து மீட்டுக் கொண்டுவர இயலாத நிலையில் இருப்பதாக சுவிஸ் வெளிவிவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. 

வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர்களை மத்திய கிழக்கிலிருந்து அழைத்துக்கொண்டுவர வழியில்லை என்று கூறியுள்ள சுவிஸ் அரசு, என்றாலும், சுவிஸ் மக்களை எப்படியாவது அழைத்துக்கொண்டுவர என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4