புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சில நாடுகளுக்கு மாணவர் விசா வழங்குவதையும் தடை செய்துள்ளார் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.
புலம்பெயர்வோர், படிக்க வருவதாகக் கூறிக்கொண்டு பிரித்தானியாவுக்கு வந்து, பிறகு புகலிடம் கோருவதாகவும், விசாக்களை தவறாக பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.
ஆகவே, ஆப்கானிஸ்தான், கேமரூன், சூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது.
அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு திறன்மிகுப் பணியாளர் விசா வழங்கப்படுவதும் நிறுத்தப்படுவதாகவும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.