எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரின் செய்தி!

#SriLanka #Fisherman #Fuel #Minister #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 months ago
எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரின் செய்தி!

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான நிலமை ஓரிரு வாரங்களில் வழமைக்கு திரும்பம் என அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழிலாளர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்நோக்கினால், அதனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4