மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கைக்கு ஏற்படவுள்ள 4 பாரிய ஆபத்துகள்!

#SriLanka #War #East #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கைக்கு ஏற்படவுள்ள 4 பாரிய ஆபத்துகள்!

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள கடுமையான பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு குறித்த கடிதத்தை இன்று அனுப்பி வைத்துள்ளார். அரசாங்கம் தனது நிலைப்பாட்டை 

உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், சுட்டிக்காட்டியுள்ள நான்கு முக்கிய பாதிப்புகள் வருமாறு:

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், இலங்கையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. இது ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும்.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான சந்தை வாய்ப்புகள் பாதிக்கப்படும். இதனால் குறிப்பாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

வான்வழிப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் தமது இலங்கைக்கான பயணங்களை இரத்து செய்து வருகின்றனர். 

இது ஹோட்டல் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் (Remittances) தடைப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். என அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!