எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியது: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை!

#SriLanka #Fuel #Public #Return #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 months ago
எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியது: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை!

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. 

நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திநிலையில் நேற்று (மார்ச் 2) விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவுகள் வருமாறு ,

டீசல்: 1 கோடி 3,28,000 லீற்றர்

92 ரக பெற்றோல்: 1 கோடி17,02,000 லீற்றர்

மண்ணெண்ணெய்: 5,68,000 லீற்றர்

95 ரக பெற்றோல்: 8,48,000 லீற்றர்

சுப்பர் டீசல்: 3,43,000 லீற்றர்

இன்று (மார்ச் 3) காலை 8:00 மணி வரை விநியோகிக்கப்பட்ட அளவு: இன்று காலை 6:00 மணி முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

காலை 8:00 மணி வரையிலான தரவுகள் வரமாறு ,

டீசல்: 4,15,740 லீற்றர்

92 ரக பெற்றோல்: 4,81,800 லீற்றர்

95 ரக பெற்றோ: 39,600 லீற்றர்

சுப்பர் டீசல்: 19,800 லீற்றர்

எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை .

இன்று மதியமாகும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இல்லாத நிலை உருவாகும் என்றும், எரிபொருளைச் சேமித்து வைக்க முயற்சிக்காமல் வழமை போல நுகர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4