பேருந்தை முந்திச் சென்றதால் நேர்ந்த விபரீதம் - பறிபோன பிஞ்சு உயிர்!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பேருந்தை முந்திச் சென்றதால் நேர்ந்த விபரீதம் - பறிபோன பிஞ்சு உயிர்!

பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 03 வயது  சிறுமி உயிரிழந்துள்ளார்.

கம்பளை-நாவலப்பிட்டி சாலையில் உள்ள நாகொல்ல பகுதியில் நேற்று (20) பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் காயமடைந்த நிலையில், அதில் ஒரு குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்து தொடர்பாக காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏத்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4