புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குடும்ப பெண்
#SriLanka
#Arrest
#Women
#drugs
#Mullaitivu
Prasu
2 hours ago
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6.5 கிராம் கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். அடசூரிய அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்படி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக 6.5 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )