கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : பெண் வழக்கறிஞர் குறித்து வெளியான மற்றுமொரு தகவல்‘!

#SriLanka #ADDA #Kanemulla Sanjeeva #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : பெண் வழக்கறிஞர் குறித்து வெளியான மற்றுமொரு தகவல்‘!

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் தாமரா அபேரத்னவால் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட எட்டு வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. 

 தொடர்புடைய வழக்கு இன்று (19) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு வந்தபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது. 

பெண் வழக்கறிஞர் மீதான விசாரணையின் போது தொடர்புடைய வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் வெளிவந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 இந்த வங்கிக் கணக்குகள் போலி தேசிய அடையாள அட்டையைப் (NIC) பயன்படுத்தி திறக்கப்பட்டதாகவும்,  இந்தக் கணக்குகள் மூலம் அதிக அளவு பணம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் தெரவிக்கப்பட்டள்ளது. 

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கணக்குகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு நீதிபதி CIDக்கு உத்தரவிட்டார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!