புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தையும் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தையும் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாளிகிதன் இன்றைய தினம் 19.02.2026ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.

   குறித்த ஊடக சந்திப்பு வாயிலாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு 18.02.206 நேற்று நடைபெற்றது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக பெரும் விவாதம் பல மணி நேரம் நடைபெற்றது.

  குறித்த விவாதத்தின் கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டமானது பல்வேறு வகையில்   தமிழ்மக்களை அடிமைப்படுத்தி ஆட்கொண்டிருக்கின்றது.   

ஜனாதிபதி  ஆட்சிக்கு வரும்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார் தற்பொழுது கூறுகிறார் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

  குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய சபை அமர்வில் பல மணி நேரம் விவாதிக்கப்பட்டது.   விவாதத்தின் போது தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமையாது என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

   இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட 37 பேரில் 36 பேர்கள் ஏகமனதாக தமது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்” எனக் கூறினார். 

   இதேவேளை  கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கட்டாகாளி கால்நடைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு பல அசைவுகரியங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாகவும் பொலிஸாரால் கரைச்சி பிரதேச சபையிடருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகிறது. 

 இதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.


இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!