மட்டக்களப்பில் தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு!

#SriLanka #Batticaloa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
மட்டக்களப்பில் தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்ற நிலையல்,  இன்று (19) காலை முதல் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக, காத்தான்குடி, எட்டுகல, பூநொச்சிமுனை, நாவலடி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை  ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

கடல் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதால் மீன்பிடி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் கனமழை காரணமாக, பல குழந்தைகள் பூங்காக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் பல விளையாட்டு மைதானங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4