இன்றைய ராசிபலன் (19.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (19.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: சிரமம் விலகும் நாள். எடுக்கும் வேலை லாபமாகும். வரவு அதிகரிக்கும். மாலையில் திடீர் செலவு ஏற்படும். பரணி: கவனமாக செயல்படுவதால் வேலையில் ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். கார்த்திகை 1: வரவின் காரணமாக பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். ரோகிணி: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும். மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். பயணம் லாபம் தரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத் தடை விலகும். ஒரு சிலர் கோயிலுக்கு செல்வீர்கள். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனக்குழப்பம் விலகும். கவனமுடன் செயல்படுவீர்.

கடகம்

புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் முயற்சியில் மதியம் வரை இழுபறி இருக்கும். அதன்பிறகு சரியாகும். பூசம்: செயல்களில் சின்னச்சின்ன தடை இருக்கும். வேலையில் போராடி வெற்றி பெறுவீர். ஆயில்யம்: தொழிலில் போட்டி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும் இருந்தாலும் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகள் இன்று மதியம் வரை எளிதாக நடக்கும். பூரம்: வியாபாரத்தில் கோபங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திரம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியபாதை தெரியும். திடீர் நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஆதாயமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் விலகுவர். வெளியூர் பயணம் நன்மை தரும். சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: தடை விலகும் நாள். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். சுவாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செலவு கட்டுக்குள் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விசாகம் 1,2,3: சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர். மனக்குழப்பம் தீரும்.

விருச்சிகம்

விசாகம் 4: விருப்பம் நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். கேட்டை: லாபம் உண்டாகும் நாள். வேலைப்பார்க்கும் இடத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல நன்மை உண்டாகும்.

தனுசு

மூலம்: நன்மையான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும். பூராடம்: வேலையில் ஏற்பட்ட தடை விலகும். தொழிலில் லாபம் கிடைக்கும். போட்டியாளர் தொல்லைகளை முறியடிப்பீர். உத்திராடம் 1: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உடல்நிலை சீராகும். திருவோணம்: தொழிலில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் கூடும். அவிட்டம் 1,2: திட்டமிட்ட வேலை முடியும். பணத்தேவை பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டு. சதயம்: வேலையில் ஏற்பட்ட பிரச்னையை முடிவிற்கு கொண்டு வருவீர். செல்வாக்கு உயரும். கையில் பணம் புரளும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.

மீனம்

பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். இன்று மதியம் வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணம் வேண்டாம். ரேவதி: இன்று மதியம் வரை பணவரவில் தடைகளை சந்திப்பீர். வரவைவிட செலவு அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!