கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு இடையில் சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு இடையே நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்கும், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்வதில் தீவிரமாக உதவியதற்கும் டாக்டர் நந்தலால் வீரசிங்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கையின் தற்போதைய செயல்திறன் வெற்றிகரமாக உள்ளது என்று கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார்.
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் மத்திய வங்கியின் பங்கிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தொடங்குவதன் மூலமும், நிலையான பொருளாதாரத்தைப் பராமரிப்பதன் மூலமும் நாடு உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மேலும் கூறியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்