ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒருவர் பலி!

#SriLanka #Crime #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
ஜிந்துபிட்டி  துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒருவர் பலி!

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரின்  என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினத்தன்று சிகை அலங்காரம் (முடி வெட்ட) சென்ற நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு ஜிந்துபிட்டியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்   பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!