அக்குரேகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய கார் எரிந்த நிலையில் மீட்பு!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
அக்குரேகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய கார் எரிந்த நிலையில் மீட்பு!

தலங்கம, அக்குரேகொடவில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி, அகலிய, குட்டியவத்த பகுதியில் உள்ள அணுகல் சாலையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் அகலிய பகுதியில் கைவிடப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வாகனத்தை எரிந்த நிலையில் மீட்டுள்ளனர். 

இந்த இரட்டைக் கொலைக்கு, தற்போது வெளிநாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஜெயலத் சில்வா ( கரந்தெனிய சுத்தா), 'காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

 இறந்த வழக்கறிஞர், 'கரந்தெனிய சுத்தா' சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் அவரது முக்கிய போட்டியாளரான 'லோகு பதி' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தியதாக  தெரியவந்துள்ளது. 

அத்துடன் கரந்தெனிய சுத்தா பற்றிய தகவல்களை வழக்கறிஞர் தனது போட்டியாளருடன் பகிர்ந்து கொண்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அவரது கூட்டாளிகளால் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இதேவேளை   இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4