அரசாங்கத்தின் முடிவு சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த பிரித்தானிய உயர் நீதிமன்றம்
#government
#England
#Palestine
#HighCourt
#organization
Prasu
3 hours ago
பிரித்தானியாவில் பலஸ்தீன ஆதரவு பிரச்சார அமைப்பான பலஸ்தீன் ஆக்ஷனை பயங்கரவாதக் குழு என வகைப்படுத்தி தடை செய்த அரசாங்கத்தின் முடிவு சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த முக்கிய தீர்ப்புக்கு பதிலளித்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி, இது பிரித்தானியாவில் அடிப்படை சுதந்திரங்களுக்கும், பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கும் கிடைத்த பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தடை முடிவு, சமீபத்திய பிரித்தானிய வரலாற்றில் பேச்சு சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக நினைவில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் பலஸ்தீன் ஆக்ஷன் அமைப்பை தடை செய்வதாக பிரித்தானியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )