நுவரெலியாவில் இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து:

#SriLanka #NuwaraEliya #three-wheeler #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
நுவரெலியாவில் இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து:

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து, நேற்று மாலை கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளையார் நீர் வீழ்ச்சிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் தலவாக்கலையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டியினூடாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4