போதைவஸ்த்து சட்டத்தை மேலும் வலுவாக்கும் அநுர அரசு
#SriLanka
#government
#drugs
#Country
#AnuraKumaraDissanayake
#NPP
Prasu
2 months ago
போதைப்பொருள் வர்த்தகர்களை பிணையின்றி தடுப்புக்காவலில் வைப்பதற்கான கடுமையான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
அவர்கள் பிணையில் செல்ல கோரிக்கை விடுக்கும் போது, அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்பில் வைக்க முடியுமா என்பது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நச்சுப் பொருள் சட்டத் திருத்தத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )