இன்றைய ராசிபலன் (13.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (13.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: பெரியோரின் ஆதரவால் வெற்றி காணும் நாள். நெருக்கடி விலகும். பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். கார்த்திகை 1: வியாபார பிரச்னை முடியும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: போராட்டத்திற்கு ஆளாகும் நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். ரோகிணி: மனதில் குழப்பம் உண்டாகும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருவாதிரை: வாழ்க்கைத்துணையின் உதவியால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். புனர்பூசம் 1,2,3: கூட்டுத் தொழிலில் லாபம் கூடும். நண்பர்களின் உதவி கிடைக்கும். 

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடைகள் ஏற்படும். பூரம்: எந்த ஒன்றிலும் உங்கள் நேரடிப் பார்வை இருப்பது அவசியம். உத்திரம் 1: பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: வேலைப்பளுவிற்கு ஆளாகும் நாள். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: தாய்வழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். சித்திரை 1,2: முயற்சிகள் இன்று தள்ளிப்போகும். சகபணியார்களுடன் பகை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். சுவாதி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சகோதரர் உதவியாக இருப்பார். விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றமடையும்.

விருச்சிகம்

விசாகம் 4: நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். கேட்டை: பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய பாதை தெரியும்.

தனுசு

மூலம்: குழப்பமின்றி செயல்படுங்கள். பிறரது விமர்சனங்களை பொருட்படுத்தாதீர். பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் யோசித்து செயல்படுவது நன்மையாகும். உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு கூடுதலாகும். திருவோணம்: முயற்சி இன்று இழுபறியாகும். பண நெருக்கடி ஏற்படும். அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சதயம்: இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். நினைத்த வேலை முடியும். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: பிறரை நம்பி இன்று உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உத்திரட்டாதி: வியாபார பிரச்னை முடியும். எதிர்பார்த்த தகவல் வரும். ரேவதி: பண விவகாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். செல்வாக்கு உயரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!