சமன் ஏக்கநாயக்கவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அப்போது அவருக்கு துணையாக சமன் ஏகநாயக்க செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்