இங்கிலாந்தில் பிரபல பல்கலைக்கழகத்திற்கு அருகே மனித புதைகுழி கண்டுப்பிடிப்பு

#Human #England #University #Skull
Prasu
4 hours ago
இங்கிலாந்தில் பிரபல பல்கலைக்கழகத்திற்கு அருகே மனித புதைகுழி கண்டுப்பிடிப்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது மனித புதைக்குழி ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர்.

அதில் குறைந்தது 10 நபர்களின் துண்டு துண்டான எச்சங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

17 முதல் 24 வயதுக்குட்பட்ட “மிகவும் உயரமான” மனிதரின் என்புக்கூடும் இதன்போது இனங்காணப்பட்டுள்ளது. அவரது சாரசரி உயரம் 6 அடி 5 அங்குலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உயரமான நபரின் மண்டை ஓட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இது ஹார்மோன் தொடர்பான வளர்ச்சி நிலையான ஜிகாண்டிசம் போன்றவற்றால் ஏற்படும் தலைவலியைப் போக்க செய்யப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. 

இதேவேளை துண்டுத் துண்டான ஏனைய எச்சங்களும் இனங்காணப்பட்டுள்ளன. அவை கி.பி 9ம் நூற்றாண்டில் “பயங்கரமான வன்முறை மற்றும் ஒருவேளை மரணதண்டனை உள்ளானவர்களின் எலும்பு துண்டுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!