மீண்டும் 4 இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!

#SriLanka #prices #Gold #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
மீண்டும் 4 இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5020 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலை இன்று 81.36 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இந்தநிலையில் இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,675 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4