இன்றைய ராசிபலன் (09.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (09.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: எதிர்பார்த்த வருவாய் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பரணி: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நண்பர்களால் உங்கள் வேலைகள் நடந்தேறும். கார்த்திகை 1: சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ரோகிணி: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் முன்னேற்றம் அடையும். மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படவும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர். திருவாதிரை: புதிய நட்பு உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர். காலையிலேயே உங்கள் எண்ணம் நிறைவேறும். ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். சங்கடங்கள் நீங்கும்.

சிம்மம்

மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்திணைவர். விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2: கடன் கொடுத்திருந்த பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். நினைத்ததை சாதிப்பீர். சுவாதி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். விசாகம் 1,2,3: விலகிச் சென்ற வாடிக்கையாளர் உங்களைத் தேடிவருவர். லாபம் கூடும். 

விருச்சிகம்

விசாகம் 4: வரவு செலவில் கவனம் தேவை. தொலைந்துபோன பொருள் உங்கள் கைக்கு வரும். அனுஷம்: உழைப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். மனம் சோர்வு அடையும். கேட்டை: பயணத்தில் சில சங்கடம் தோன்றும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்

தனுசு

மூலம்: விருப்பம் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை விலகும். பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். உத்திராடம் 1: நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக, எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: யோகமான நாள். நேற்றுவரை தடைபட்டிருந்த வேலை இன்று எளிதாக நடந்தேறும். சதயம்: எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த பணம் வரும்.

மீனம்

பூரட்டாதி 4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். உத்திரட்டாதி: பணியில் கவனம் தேவை. தேவையற்றப் பிரச்னைகள் தேடிவரும். ரேவதி: மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!