இன்றைய ராசிபலன் (08.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (08.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்ட வேலைகளை இன்று நடத்தி முடிப்பீர். பரணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: கூட்டுத்தொழிலில் பங்குதாரரின் ஒத்துழைப்பு கூடும். நன்மை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபார போட்டியாளர் பலமிழப்பார். ரோகிணி: சுறுசுறுப்பாக செயல்பட்டு லாபம் அடைவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பாக்ய சனி உங்கள் கனவை நனவாக்குவார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். திருவாதிரை: வியாபார நெருக்கடி நீங்கும். உறவினர்கள் நற்செய்தியுடன் வருவர். புனர்பூசம் 1,2,3: முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். பூசம்: நண்பர்களின் உதவி இன்று நன்மை தரும். உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஆயில்யம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் தீரும். செலவிற்கேற்ற பணம் வரும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். புதிய பொருட்கள் வாங்குவீர். உத்திரம் 1: சகோதரர்களின் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம். சுவாதி: லாப கேது வருமானம் தருவார். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். அனுஷம்: பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும். வரவு செலவில் நிதானம் தேவை. கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னைகள் தேடி வரும்.

தனுசு

மூலம்: வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர். நெருக்கடிகள் நீங்கும். உத்திராடம் 1: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2: மனதில் நிம்மதி உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: தடைகள் விலகும் நாள். உழைப்பாளர்களின் நிலை உயரும். சதயம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். பூரட்டாதி 1,2,3: விஐபிகளின் ஆதரவால் உங்களது வேலைகள் இன்று நடந்தேறும்.

மீனம்

பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சிலர் உங்களுக்கு எதிராக மாறுவர். உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. ரேவதி: முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!