3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய உள்துறைச் செயலாளர்
#Country
#Warning
#migrants
#England
#Africa
Prasu
5 hours ago
நமீபியா, அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு மீது விசா தடைகளை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்க மறுத்திருந்த நிலையில் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நாடுகள் புலம்பெயர்ந்தோரை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய குற்றவாளிகள், புகலிடம் கோரத் தவறியவர்கள் மற்றும் விசா காலாவதியாகி தங்கியிருப்பவர்களைத் திரும்பப் பெறுவதில் இங்கிலாந்துடன் ஒத்துழைக்க மேற்படி மூன்று ஆப்பிரிக்க நாடுகளும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் காரணமாக இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட குடியேறிகள் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.
(வீடியோ இங்கே )