இன்றைய ராசிபலன் (07.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 hours ago
இன்றைய ராசிபலன் (07.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: வேலைகள் இன்று எளிதாக நடந்தேறும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரணி: வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இழுபறியாக இருந்த விவகாரத்தை பேசி முடிப்பீர்கள். கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உழைப்பிற்கேற்ற ஆதாயம் காணும் நாள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். மிருகசீரிடம் 1,2: துணிச்சலாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சியில் லாபம் காண்பதற்காக பிறரை அனுசரித்துச் செல்வீர்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். பூசம்: பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். ஆயில்யம்: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

மகம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். பழைய கடன்களை அடைப்பீர். பூரம்: குடும்ப பிரச்னைகளை சரிசெய்வீர். எதிர்பார்த்த வாய்ப்பு உங்களைத் தேடிவரும். உத்திரம் 1: தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். கையில் பணம் புழங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவால் வளம்காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். சித்திரை 1,2: தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். தொழில் முன்னேற்றம் அடையும்.

துலாம்

சித்திரை 3,4: திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். சுவாதி: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மதியம்வரை இருந்த நெருக்கடி மாலையில் நீங்கும். விசாகம் 1,2,3: வெளிவட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும், வீட்டிற்குள் நிம்மதி இருக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: முன்னேற்றமான நாள். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். அனுஷம்: வருமானத்தில் இருந்த தடை விலகும். நினைத்த வேலைகளை முடிப்பீர்கள். கேட்டை: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சிகள் லாபமாகும். சேமிப்பு உயரும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். உங்கள் திறமை வெளிப்படும். பூராடம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும். உத்திராடம் 1: கடன் கொடுத்த பணம் வசூலாகும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும். திருவோணம்: எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். அவிட்டம் 1,2: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: இன்று மதியம்வரை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

மீனம்

பூரட்டாதி 4: சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். உத்திரட்டாதி: நட்புகள் உதவியுடன் உங்கள் வேலையை முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ரேவதி: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!