சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்து - பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி
#Switzerland
#Accident
#government
#fire
#Fund
Prasu
3 hours ago
சுவிற்சர்லாந்தில் கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வலைஸ் மாகாணம் முதல்க்ட்ட அவசர உதவியாக 10,000 பிராங்கை வழங்கியுள்ளது.
48 பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. “கோரப்பட்ட ஆவணங்கள் பெறப்பட்டதும் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, பணம் செலுத்துவதற்காக வங்கிக்கு அனுப்பப்படுவதாக வலைஸ் மாகாணம் நேற்று அறிவித்துள்ளது.
செலுத்தப்பட்டுள்ள 48 கொடுப்பனவுகளில், 14 வெளிநாட்டு கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன, அவற்றில் பிரான்சில் ஏழு, இத்தாலியில் ஆறு மற்றும் பெல்ஜியத்தில் ஒன்று என வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )