சட்டவிரோத பார் உரிமங்கள் இரத்து செய்யப்படுமா?

#SriLanka #Bar #AnuraKumaraDissanayake #licences #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
சட்டவிரோத பார் உரிமங்கள் இரத்து செய்யப்படுமா?

2024 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தகுதியற்றவர்களுக்கு மதுபான உரிமங்கள் (Bar Licenses) வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டதாலும், வருவாய் இழப்பு மற்றும் தனிநபர் ஏகபோக உரிமை காரணமாகவும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலப்பகுதியில் பெருமளவிலான உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட மதுபான கூடங்கள் காரணமாக பல இளைஞர், யுவதிகள் தற்போது இந்த பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

இதனை கட்டுப்படுத்துவதாக அனுர அரசாங்கம் கூறியிருந்தாலும், அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் நிறைவுற்றுள்ளது. இருப்பினும் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 

ஆகவே சட்டவிரோத அனுமதிகளை இரத்து செய்வதன்மூலம் இதற்கான தீர்வை பெற்றுகொள்ள முடியும். தற்போதை அரசாங்கம் இந்த விடயத்தில் கரிசனை காட்டும் பட்சத்தில் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும். 

இதனை அனுர அரசாங்கம் உடனடியாக செய்யுமா? இது லங்கா4 ஊடகத்தின் கேள்வியாக இருக்கிறது!

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!