கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து! 21 வயது இளைஞன் உயிரிழப்பு

#SriLanka #Accident #Kilinochchi #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து! 21 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரவூர்திகள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்ற பாரவூர்தி வீதியில் நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த பாரவூர்தி அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பாரவூர்தியின் உதவியாளராக பணியாற்றிய 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4