கடந்த 28.01.2026 கிளிநொச்சி டிப்பர்- பஸ் விபத்தில் சிக்கி மீண்ட நபரின் பதிவு..

#SriLanka #Accident #Kilinochchi #Record #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
கடந்த 28.01.2026  கிளிநொச்சி  டிப்பர்- பஸ் விபத்தில் சிக்கி மீண்ட நபரின் பதிவு..

28.01.2026 ஆம் திகதி யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி சென்ற இ. போ. ச.பேருந்து கண்டி வீதி கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்துடன் பாரிய விபத்துக்குள்ளாகியது. 

இதில் நானும் பேருந்தில் சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமுள்ள முதலாவது இருக்கையில் பயணம் செய்தேன். பேருந்து சாரதியின் திறமையினாலும் கடவுளின் அனுக்கிரக்கத்தினாலும் உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லை. இரு வாகனங்களின் சாரதியும், இன்னொரு பயணியும் காயங்களுக்கு உள்ளாகினர். 

மேலும் எனக்கு சிறு காயம் மற்றும் உடலில் உட்காயம் ஏற்பட்டது. நான் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு சிரமப்பட்டேன். பலமாக அடிபட்டதால் மூச்செடுக்க சிரமப்பட்டேன். 

அதில் வேடிக்கை பார்த்தவர்கள் சிலரிடம் எனக்கு இயலாமை இருக்கு தலைசுற்றுகிறது சொல்லியும் அந்த நேரம் யாரும் உதவிசெய்யவில்லை. 

நான் மெதுவாக வீதியின் ஓரத்தில் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்தேன். தண்ணீர் அருந்தி சில நிமிடத்தில் யாரும் என்னை வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லவில்லை. 

எல்லோரும் புகைப்படம், வீடியோ எடுப்பதில் அக்கறையாக நின்றார்கள். எனது அலுவலகத்திற்கு தொலைபேசி எடுத்து அவர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. 

அங்கு காயமடைந்த மூவரும் அனுமதிக்கப்படிருந்தனர். எமது உத்தியோகாத்தர்கள் மற்றும் அங்கிருந்த வைத்தியர்கள் தொடக்கம் சுகாதார சேவை சிற்றூழியர்கள் வரை எனக்கு பல வழிகளில் உதவி செய்தார்கள். 

அவர்களிற்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி .

மேலும் கூறுகின்றேன் வேடிக்கை பார்ப்பது, யார் சமூக வலைத்தளத்தில் யார் முதலில் போடுவதை தவிர்த்து பாதிக்க பட்டவர்களுக்கு முதலில் உதவி செய்யுங்கள்

யார் மனதையும் நான் புண்படுத்துவதற்காக இதனை பதிவிடவில்லை. அந்த நேரம் நான் பட்ட துயரம் சொல்லமுடியவில்லை.

மீண்டும் பேருந்து சாரதிக்கும் கடவுளுக்கும் நன்றி 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!