தெலுங்கானாவில் பாடசாலை உணவு உட்கொண்ட 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
#India
#School
#Student
#Hospital
#Food
Prasu
3 hours ago
தெலுங்கானா மாநிலத்தில் பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 20 மாணவர்கள் சுகவீனம் அடைந்துள்ளனர்.
வயிற்று வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டதை தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் விழாவொன்றில் சமைக்கப்பட்ட உணவை சூடாக்கி மாணவர்களுக்கு வழங்கியதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறைந்தது 42 குழந்தைகள் அந்த உணவை சாப்பிட்டதாகவும், அவர்களில் 20 பேர் உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )