கணக்காய்வாளர் நாயக பதவி நியமனம் தொடர்பில் எட்டப்பட்டுள்ள தீர்மானம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Bimal Ratnayake
Thamilini
1 hour ago
புதிய சிவில் சமூக பிரதிநிதிகளுடன் அரசியலமைப்பு சபை இன்று (31) இரண்டாவது அமர்விற்காக கூடும் போது, கணக்காய்வாளர் நாயக பதவிக்கான ஜனாதிபதியின் வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்று அரசாங்கத்தின் தலைமை கொறடா பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
புதிய சிவில் சமூக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் நேற்று (30) நடைபெற்றது.
இதன்போது காலியாக உள்ள கணக்காய்வாளர் நாயகப் பதவியை நிரப்புவது குறித்து முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், இந்த விவகாரம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.