திருகோணமலையில் 117 ஆமை முட்டைகளுடன் நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Trincomalee
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
சட்டவிரோதமாக நூற்று பதினேழு ஆமை முட்டைகளை வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை கல்லடிசென்னை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஆமை முட்டைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.